குழந்தை வரத்திற்காக செபம்.
குழந்தை வரத்திற்காக செபம்
இயேசுவே !
மன்றாடும் எவரும் ஏமாந்து போவதில்லை. குழந்தை வரத்திற்க்காக உம்மிடம் மன்றாடும் என்னைக் கண்பாரும். பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ச்சியால் கூச்சலிடு: பிரசவ வேதனையுறாத மங்கையே, அக்களித்து ஆர்ப்பரி. ஏனெனில் மலதியின் மக்கள், கணவனைக் கொண்டுள்ளவளின் மக்களை விடப் பலராயினர் என்று கூறிய ஆண்டவரே. வயதான காலத்தில் ஆபிரகாமிற்கு குழந்தையைத் தந்தது போல, எங்களுக்கு குழந்தை செல்வத்தைத் தந்தருளும். உன் மக்களின் மக்களை நீ காண்பாயாக என்று சங்கீதக்காரர் சொல்வது என் வாழ்விலும் மெய்யாகட்டும். உமது வல்லமையால் என் குடும்பத்தை ஆசிர்வதித்து, பல தலைமுறைகள் எங்கள் குடும்பம் தழைக்க குழந்தை வரத்தை எங்களுக்கு தந்தருளுமாறு கெஞ்சி மன்றாடுகிறேன்.
ஆமென்.
Comments
Post a Comment