வியாகுல மாதா ஜெபமாலை
வியாகுல மாதா ஜெபமாலை (மாதா உலகில் இருக்கும்போதும், பல்வேறு காட்சிகளிலும், மற்றும் சுரூபங்களிலும் சிந்தும் கண்ணீர்களுக்குப் பரிகாரமாக) ஜெபமாலையின் பாடுபட்ட சுரூபத்தில் முன்பு நின்று: சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவராகிய இயேசுவே! உமது பாதத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப் பாதையில் அனுதாப வேதனையுடன் உம்மைப் பின்சென்ற உம்முடைய தாயின் கண்ணீர்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். நல்லவரான ஆண்டவரே, உம் மிகப்புனித அன்னையின் கண்ணீர்கள் எங்களுக்குத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதனால் பூவுலகில் உமது திருச்சித்தத்தை நிறைவேற்றவும் மோட்சத்தில் நித்தியத்திற்கும் உம்மைப் புகழ்ந்து துதிக்கவும் தகுதி பெற்றவர்களாகும்படி செய்தருள்வீராக. ஆமென். பரிசுத்த கன்னி மரியாள் தமது திருக் குமாரனின் பாடுகள் நிமித்தமாக அநுபவித்த ஏழு வியாகுலங்களைத் தியானிப்போம். முதலாம் வியாகுலம் இந்த முதல் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாளுக்குச் சிமியோன் சொன்ன தீர்க்கதரிசனத்தால் தமது திருக்குமாரனுடைய மரணத்தையும் மனுஷருடைய சேதத்தையும் அறிந்து, அவர்கள் தமது இருதயத்...
Comments
Post a Comment