கத்தோலிக்க திருச்சபை ஆண்டவர் இயேசு கிறிஸ்து உருவாக்கியது




🌿கத்தோலிக்க திருச்சபை ஆண்டவர் இயேசு கிறிஸ்து உருவாக்கியது என்பதற்கு பைபிளில் உள்ள இறை வார்த்தை குறிப்புகள் உள்ளன.

மத்தேயு 16:18, மத்தேயு 16:19

பேதுரு என்றால் பாறை அவர் மேல் கத்தோலிக்க திருச்சபை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் கட்டப்பட்டது.

Saint Peter's Square பேராலயம்

ஆண்டவர் சொன்ன இறை வார்த்தை நிறைவேறி உள்ளது.

நரகம் அதன் மீது வெற்றி கொள்ள இயலாது.

2000 ஆண்டுகளாக கத்தோலிக்க 
திருச்சபையை அழிக்க நிறைய முயற்சிகள் நடந்தும் முடியவில்லை.

அடுத்தது யோவான் 21:15,16,17.

ஒரே மந்தை ஒரே ஆயர் 

அதாவது முறுமுறையும் புனித பேதுருவை தன் ஆடுகளை கண்காணிக்க சொல்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதாவது கத்தோலிக்க திருச்சபையின் முதல் ஆயராக புனித பேதுரு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் நியமனம் செய்ய படுகின்றார்.

ஏன் கத்தோலிக்கம் என்ற பெயர்

கத்தோலிக்கம் என்றால் உலகளாவிய என்று பொருள்.

புனித பேதுரு பெந்தகோஸ்து நாள் அன்று உரைத்த நற் செய்தியை வெவ்வேறு மொழிகளில் பேசும் மக்கள் தங்கள் தாய் மொழியில் கேட்டனர் அது போல கத்தோலிக்க திருச்சபை திருப்பலியில் ஒரே இறை வார்த்தை உலகம் முழுவதும் வாசிக்க படுகின்றது அதை உலகில் உள்ள அனைத்து கத்தோலிக்க திருச்சபை மக்களும் தங்கள் தாய் மொழியில் கேட்கின்றனர்.

உரோமையார் 16:17, 1 கொரிந்தியர் 1:10 

புனித பவுல் பிரிவினை இருந்தால் அது ஆண்டவரின் திருச்சபை இல்லை என்று கூறுகின்றார் அதாவது ஒருமித்த கருத்து உடையவர்களாக இருக்க வேண்டும் கத்தோலிக்கம் போல ஒரே வாழிபாடு முறை இருக்க வேண்டும்.

அதன் பின் எவ்வாறு பிரிவினை போலிகள் தோன்றி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மந்தையில் உள்ள ஆடுகளை சிறதடிப்பர் என்றும் கூறப்பட்டுள்ளத.

திருத்தூதர் பணிகள் 20:29, 20: 30.

கத்தோலிக்க நம்பிக்கை உள்ள மக்களை பிரிவினை சபை தங்கள் சபைக்கு இழுக்க கூடாது என்று புனித பவுல் கூறுகின்றார்.

உரோமையர் 15:20

இறை வார்த்தை எவ்வளவு முக்கியமான ஒன்றோ அது போல நற்கருணை ஆண்ட்வரின் திரு உடல், திரு இரத்தம் வாழிபாடு முறை.

லூக்கா 22:19, 20

யோவான் நற்செய்தி 6 : 51,53,54,55,56,57,58

1 கொரிந்தியர் 11:23,24,25,26,27,28,29

ஆண்டவரின் திரு உடலை உண்ணது, திரு ரத்தத்தை பருகாது ஒருவர் என்னதான் இறை வார்த்தை போதித்தாலும் அவர் விண்ணக வாழ்வை அடைய முடியாது.

மேலும் எவ்வாறு ஆதி கிறிஸ்தவர்கள் அப்பம் பிட்டு வழிபாடு செய்து ஆண்டவரின் இறப்பையும், ஊயிர்பையும் நினைவு கூர்ந்து வாழ்ந்தார்களோ அதே போல் கத்தோலிக்க திருச்சபை இன்றும் அபோஸ்தலிக்க வழிபாடு முறையில் ஆண்டவரின் திருவிருந்து 
கொண்டாட்டாதில் பங்கு கொள்ளகின்றது

1 கொரிந்தியர் 10:16,17

அப்போஸ்தலிக்க மார்புகளை கடைபிடிக்கும் ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை மட்டுமே.

கொரிந்தியர் 11:2

திருத்தூதர் பணிகள் 20:7

எனவே கத்தோலிக்கம் இறை வார்த்தை படி நடக்கின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்னும் நிறைய இறைவார்தைகளை மையமாக கொண்டு ஆண்ட்வரின் பாத சுவடுகளை பின்பற்றி நடக்கும் ஒரே திருச்சபை கத்தோலிக்க திருச்சபை மட்டுமே.






________




1 திமொத்தேயு - 1 திமொ 3 15 நான் வரக் காலந்தாழ்த்தினால், நீ கடவுளின் வீட்டாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இத்திருமுகத்தின் வழியாகத் தெரிந்து கொள்ளலாம். இவ்வீட்டாரே வாழும் கடவுளின் திருச்சபை; இத்திருச்சபை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது. 

உலகம் முழுவதும் இறைவன் இயேசு விண்ணகம் சென்ற நாளில் இருந்து இன்றய தியதி வரை இறைவன் இயேசுவின் இறையாட்சியை விண்ணக தந்தை கடவுள் சித்தபடி தூய ஆவியாம் கடவுள் துணை கொண்டு போதிக்கிறது புனிதமிக்க கத்தோலிக்க திருச்சபை மட்டுமே 

உங்கள் அமைப்புகளில் யோகோவா விடனஸ் கடவுள் இயேசுவை ஏற்று கொள்வதில்லை 

பெந்தகோஸ்து யோகோவா உருவம் உள்ள கடவுளை ஏற்று கொள்வதில்லை

இரத்த சாட்சிகளாலும் மறை சாடசிகளாலும் இன்றளவும் இறை இயேசுவின் விண்ணக அரசின் மண்ணக வீடாக ஒரே ஆயன்ஒரே மந்தை என்று இறையாட்சியை போதிக்கிறது 

உங்கள் சபை பெயர் என்ன ???

Comments

Popular posts from this blog

சுருக்கமான சிலுவைப்பாதை ! தமிழ் மொழியில் !

Gospel of the day 02/August/2026

Gospel of the day 24/December/2023