கிறிஸ்து அரசர் நவநாள்.
🌹👑🌹👑🌹👑🌹👑
கிறிஸ்து அரசர் நவநாள்.
நாள்-1
தொடக்க செபம்:
ஓ இயேசுகிறிஸ்துவே! தேவரீரைச் சகலத்திற்கும் இராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன். படைக்கப்பட்ட சகல வஸ்துக்களும், உமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. என் பேரில் உமக்குள்ள சகல சுதந்திரங்களையும் பிரயோகித்து, என்னை ஆண்டு நடத்தியருளும். பசாசையும் அதனுடைய ஆரவாரங்களையும், அதனுடைய கிரியைகளையும் விட்டுவிடுகிறதாக நான் ஞானஸ்தானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டைப் புதுப்பிப்பதுடன், நல்ல கிறிஸ்தவனாகச் சீவிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். இயேசுவின் அர்ச்சிக்கப்பட்ட இராஜரீகத்தை ஏற்றுக்கொள்ளும்படிக்கும், அதன் வழியாய் உலகம் எங்கிலும் உலக சமாதானத்தின் ஆளுமை ஸ்தாபிக்கப்படும்படிக்கும், அற்பமாகிய என் கிரியைகளையெல்லாம் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
-- ஆமென்.
சிந்தனை:
கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன் பின்னணியை நாம் சிந்திக்கும்போது, இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன. முதலாம் உலகப்போர் முடிந்திருந்தாலும், உலகத்தில் இன்னும் பகைமை, பழிவாங்கும் வெறி ஆகியவை அடங்கவில்லை. இந்த உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது; அரசர்கள், மற்றும் தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் தங்கள் காலனிய ஆதிக்கத்தின் வழியே, இன்னும் பல கோடி மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென்ற வெறி ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்தது. மன்னர்களும், தலைவர்களும் கொண்டிருந்த அதிகார வெறியைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்கள், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை அரசராக அறிவித்தார். கிறிஸ்துவும் ஓர் அரசர் தான், அவரது அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும், மக்கள் குறிப்பாக தலைவர்கள் கண்டு, பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திருநாளின் உதவியோடு, நாம் பாடங்களை பயில முன்வர வேண்டும் என்பதே கிறிஸ்து அரசர் திருநாளின் நோக்கம்.
இறுதி செபம்:
ஆண்டவராகிய கிறிஸ்து அரசரே,
எங்கள் குடும்பங்களின் தலைவரே,
நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். நாங்கள் உம்மோடு என்றென்றும் ஒன்றித்திருக்க ஆசையாய் இருக்கிறீர். நீர் எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாய் இருக்கின்றீர். நீர் சக்கேயுவிடம் கூறியது போல 'இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று, எங்களிடமும் திருவுளம் மலர்ந்து சொல்வீராக. நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி, புகழ்ந்து எப்போதும் உமக்கு ஏற்புடையவர்களாக வாழ உதவியருளும். எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி, எங்கள் குடும்பங்களில் நிம்மதியும், சமாதானமும் நிலவச் செய்யும். ஆமென்.
🌹👑🌹👑🌹👑🌹👑
கிறிஸ்து அரசர் நவநாள்.
நாள்-2
தொடக்க செபம்:
ஓ இயேசுகிறிஸ்துவே! தேவரீரைச் சகலத்திற்கும் இராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன். படைக்கப்பட்ட சகல வஸ்துக்களும், உமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. என் பேரில் உமக்குள்ள சகல சுதந்திரங்களையும் பிரயோகித்து, என்னை ஆண்டு நடத்தியருளும். பசாசையும் அதனுடைய ஆரவாரங்களையும், அதனுடைய கிரியைகளையும் விட்டுவிடுகிறதாக நான் ஞானஸ்தானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டைப் புதுப்பிப்பதுடன், நல்ல கிறிஸ்தவனாகச் சீவிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். இயேசுவின் அர்ச்சிக்கப்பட்ட இராஜரீகத்தை ஏற்றுக்கொள்ளும்படிக்கும், அதன் வழியாய் உலகம் எங்கிலும் உலக சமாதானத்தின் ஆளுமை ஸ்தாபிக்கப்படும்படிக்கும், அற்பமாகிய என் கிரியைகளையெல்லாம் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
-- ஆமென்.
சிந்தனை:
எப்போதும் மக்களுக்காக வாழ்பவர் கிறிஸ்து அரசர்
முன்பொரு காலத்தில், பெர்சியா நாட்டை ஆண்ட ஷா என்ற மன்னர், மக்கள்மீது அதிகமான அக்கறையும், அன்பும் கொண்டவராக இருந்தார். எந்தளவுக்கு என்றால், இரவு நேரங்களில் மாறுவேடத்தில் நகர்வலம் சென்று, மக்களோடு பேசுவார். அப்போது அவர்கள் சொல்லக்கூடிய குறை, நிறைகளை எல்லாம் கருத்தில் எடுத்துகொண்டு, மக்களுக்கு எது தேவையோ அதைச் செய்து வந்தார். இதனால் மக்கள் அனைவரும், அவரது ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒருநாள் அரசர், ஊரில் இருக்கக்கூடிய ‘பொதுக்குளியல் அறைகள்’ பகுதிக்குச் சென்றார். அங்கே மக்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வெதுவெதுப்பான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பக்கூடியவர்கள், அதில் மகிழ்ச்சியாகக் குளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவார்கள். இப்படி மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகக் குளிக்க, தண்ணீரைச் சூடாக்குகின்ற பணியை யார் செய்கிறார்? என்று பார்ப்பதற்காக மன்னர் ‘பொதுக்குளியல் அறைகள்’ இருக்கக்கூடிய பகுதியின் உட்புறத்திற்குச் சென்றார்.
அங்கே ஒரு தாழ்வான அறை இருந்தது. அதில் ஒரு பெரியவர் நாள் முழுவதும், வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய அளவில், தண்ணீரைச் சூடாக்கிக் கொண்டிருந்தார். சாதாரண மனிதர் உருவில் இருந்த அரசர், அம்மனிதரிடம் பேச்சுக் கொடுத்தார். அதற்கு அம்மனிதர், “நாள் முழுவதும் இந்த இருட்டு அறைக்குள் சூட்டையும், வெக்கையையும் தாங்கிக்கொண்டு வேலைப் பார்த்தாலும், மக்கள் மகிழ்ச்சியாகக் குளிக்கிறார்களே என்று நினைக்கும்போது, எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். அதோடு நின்றுவிடாமல், அவர் தன்னிடம் இருந்த கொஞ்சம் உணவையும், சாதாரண உடையில் இருந்த அரசரோடு பகிர்ந்து உண்டார்.
இவற்றையெல்லாம் பார்த்து, அரசருக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை. சிறிதுநேரம் அவர் அவரிடம் பேசிவிட்டு, இன்னொரு நாள் வருவதாக வாக்குறுதிக் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
ஒருசில நாட்களுக்குப் பிறகு, அரசர் மீண்டுமாக அந்த மனிதர் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவரிடம் பேசினார். அன்றைக்கு அரசர் அவரிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், நான் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, தான் யார் என்பதை அவருக்கு வெளிப்படுத்தினார்.
அரசர் தான், தன்னைப் பார்க்க இங்கே மாறுவேடத்தில் வந்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு, அந்த மனிதர், “அரசே! எனக்கு எதுவும் வேண்டாம். யாருமே வராத இந்தப் பகுதிக்கு வந்து, என்னைப் பார்த்துப் பேசினீர்களே, அந்த அன்பு ஒன்றே போதும்” என்றார். தான் அரசனாக இருந்தாலும், தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து, சாதாரண மனிதரைப் பார்க்க வந்த அந்த ஷா, மக்களுக்காகவே வாழ்ந்தவர் என்பது தெளிவாகிறது.
அரசர் மக்களுக்காக வாழ வேண்டும். மக்கள் தன்னிறைவு பெற, அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் மகிழ்சிக்காக அவர் இறங்கி வர வேண்டும். இரவும், பகலும் மக்களுக்கு சேவை செய்வதையே, மிகவும் பெரிதாகக் கொள்ள வேண்டும். விண்ணிலிருந்த ஆண்டவர் இயேசு மணணகம் வந்து, பாவிகளாகிய நம்மை தன்னுடைய நிபந்தனையற்ற, நிரந்தரமான அன்பினால் அரவணைத்தார். நமக்காகவே மரித்தார். அன்பு என்பது இன்னதென்று சொல்லித்தந்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவே முடியாது.
அரசர்களாக, அரசிகளாக இருக்கின்ற நாம், நமக்காக வாழாமல் அருகிலிருப்பவர்கள் நலனில் அக்கறை கொண்டு வாழும்போது, வாழும் வாழ்க்கை இனிக்கிறது. நம் அருகிலிருப்பவர்கள் நலம்பெற நாம் கரம் கொடுப்போம். அதிகாரம் காட்டாமல், அன்பை வெளிப்படுத்தி அன்பின் மாந்தர்களாக வாழ்வோம். நம் அருகிலிப்பவர்களின் மனங்களில் குடிகொள்வோம். தரைமட்டும் தாழ்த்தி, அடுத்தவருக்கு பணி செய்வோம். சீடர்களின் பாதங்களைக் கழுவிய, இயேசு தரும் பாடம் நமதாகட்டும். நம் அன்பின் ஆட்சியால் அகிலம் ஆரோக்கியமடையச் செய்வோம்.
இறுதி செபம்:
ஆண்டவராகிய கிறிஸ்து அரசரே,
எங்கள் குடும்பங்களின் தலைவரே,
நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். நாங்கள் உம்மோடு என்றென்றும் ஒன்றித்திருக்க ஆசையாய் இருக்கிறீர். நீர் எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாய் இருக்கின்றீர். நீர் சக்கேயுவிடம் கூறியது போல 'இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று, எங்களிடமும் திருவுளம் மலர்ந்து சொல்வீராக. நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி, புகழ்ந்து எப்போதும் உமக்கு ஏற்புடையவர்களாக வாழ உதவியருளும். எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி, எங்கள் குடும்பங்களில் நிம்மதியும், சமாதானமும் நிலவச் செய்யும். ஆமென்.
🌹👑🌹👑🌹👑🌹👑
கிறிஸ்து அரசர் நவநாள்.
நாள்-3
தொடக்க செபம்:
ஓ இயேசுகிறிஸ்துவே! தேவரீரைச் சகலத்திற்கும் இராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன். படைக்கப்பட்ட சகல வஸ்துக்களும், உமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. என் பேரில் உமக்குள்ள சகல சுதந்திரங்களையும் பிரயோகித்து, என்னை ஆண்டு நடத்தியருளும். பசாசையும் அதனுடைய ஆரவாரங்களையும், அதனுடைய கிரியைகளையும் விட்டுவிடுகிறதாக நான் ஞானஸ்தானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டைப் புதுப்பிப்பதுடன், நல்ல கிறிஸ்தவனாகச் சீவிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். இயேசுவின் அர்ச்சிக்கப்பட்ட இராஜரீகத்தை ஏற்றுக்கொள்ளும்படிக்கும், அதன் வழியாய் உலகம் எங்கிலும் உலக சமாதானத்தின் ஆளுமை ஸ்தாபிக்கப்படும்படிக்கும், அற்பமாகிய என் கிரியைகளையெல்லாம் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
-- ஆமென்.
சிந்தனை:
எப்போதும் நல்லதையே பேசியவர் கிறிஸ்து அரசர்!
1927ம் ஆண்டு வெளியான ஒரு புகழ்பெற்ற திரைப்படம், “The King of Kings”. இந்த மௌனப்படம், இயேசு இவ்வுலகில் வாழ்ந்த இறுதி வாரங்களைத் திரைக்குக் கொணர்ந்தது. இத்திரைப்படம், பல கோடி மக்களால் பாராட்டு பெற்றாலும், இதன் இயக்குனர் Cecil B.De Mille அவர்கள், தனக்கு கடிதமாக வந்து சேர்ந்த ஒரே ஒரு பாராட்டு மட்டுமே தன் உள்ளத்தைத் தொட்டதென்று கூறினார். அந்த மடலை எழுதியவர், இறக்கும் நிலையில் இருந்த ஒரு பெண்.
ஒரு சில நாட்களே வாழப்போகிறோம் என்பதை உணர்ந்த அந்தப் பெண், சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் இத்திரைப்படத்தைப் பார்த்தார். பின்னர், அவர் இயக்குனர் Cecil அவர்களுக்கு ஒரு மடல் அனுப்பினார். “The King of Kings திரைப்படத்திற்காக உங்களுக்கு மிக்க நன்றி. சாகப்போவதை எண்ணி இதுவரை பயந்த என் மனதில், இப்போது ஆவலுடன் மறுவாழ்வை எதிர்பார்க்கும் மகிழ்வு வந்துள்ளது” என்று அப்பெண்மணி தன் மடலில் எழுதியிருந்தார்.
.
வேதனையின் உச்சியில், சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம், வெறுப்புடன் வெளி வரும். தங்களை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு, “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்று வழங்கிய வாக்குறுதி, அந்தக் குற்றவாளிக்கு மட்டுமல்ல, கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, கோடான கோடி மனிதர்களுக்கு, நம்பிக்கை வழங்கியுள்ளது. குறிப்பாக நான் நம்பிக்கையுடன் உள்ளேன். எனக்கு இயேசு நம்பிக்கை அளித்துள்ளார். என் சாவை துணிவுடன் சந்திப்பேன். ஆண்டவரில் உயிர்த்தெழுவேன் என்றார் நம்பிக்கையுடன் அந்த பெண்.
கிறிஸ்து அரசர் எப்போதும் நல்ல வார்த்தைகளையே வழங்கியவர். அவர் சொன்ன வார்தைகள், இன்றும் பலருக்கு குணம் அளிக்கின்றது. நம்பிக்கை தருகின்றது. பலம் கொடுக்கின்றது. பாதை காட்டுகின்றது. புனித பயணத்தை அமைத்துக் கொடுக்கின்றது. மிகப்பெரிய தாக்கத்தை, அவர்மீது தாகம் கொண்ட அனைவரிலும் ஏற்படுத்துகின்றது.
நாமும், கிறிஸ்து அரசரின் வழியில் அரசாட்சி செய்யவே இந்த நாள் அழைக்கின்றது. அதட்டி காரியத்தை செய்ய விரும்பாதீர்கள். பண்புடனே பாராட்டி காரியங்களை செய்யுங்கள். நல்ல வார்ததைகளை அனைவருக்கும் நல்லாசீராக வழங்குவோம். நன்மைகள் செய்து நம்முடன் இருப்பவரோடு நன்கு பழவோம். நம் வார்த்தைகள் பிறருக்கு மருந்தாக அமையட்டும். பிறரை மயக்கும் மந்திரசக்தியாக வல்லமையை பொழியட்டும்.
இறுதி செபம்:
ஆண்டவராகிய கிறிஸ்து அரசரே,
எங்கள் குடும்பங்களின் தலைவரே,
நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். நாங்கள் உம்மோடு என்றென்றும் ஒன்றித்திருக்க ஆசையாய் இருக்கிறீர். நீர் எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாய் இருக்கின்றீர். நீர் சக்கேயுவிடம் கூறியது போல 'இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று, எங்களிடமும் திருவுளம் மலர்ந்து சொல்வீராக. நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி, புகழ்ந்து எப்போதும் உமக்கு ஏற்புடையவர்களாக வாழ உதவியருளும். எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி, எங்கள் குடும்பங்களில் நிம்மதியும், சமாதானமும் நிலவச் செய்யும். ஆமென்.
🌹👑🌹👑🌹👑🌹👑
கிறிஸ்து அரசர் நவநாள்.
நாள்-4
தொடக்க செபம்:
ஓ இயேசுகிறிஸ்துவே! தேவரீரைச் சகலத்திற்கும் இராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன். படைக்கப்பட்ட சகல வஸ்துக்களும், உமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. என் பேரில் உமக்குள்ள சகல சுதந்திரங்களையும் பிரயோகித்து, என்னை ஆண்டு நடத்தியருளும். பசாசையும் அதனுடைய ஆரவாரங்களையும், அதனுடைய கிரியைகளையும் விட்டுவிடுகிறதாக நான் ஞானஸ்தானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டைப் புதுப்பிப்பதுடன், நல்ல கிறிஸ்தவனாகச் சீவிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். இயேசுவின் அர்ச்சிக்கப்பட்ட இராஜரீகத்தை ஏற்றுக்கொள்ளும்படிக்கும், அதன் வழியாய் உலகம் எங்கிலும் உலக சமாதானத்தின் ஆளுமை ஸ்தாபிக்கப்படும்படிக்கும், அற்பமாகிய என் கிரியைகளையெல்லாம் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
-- ஆமென்.
சிந்தனை:
எப்போதும் நம்மோடு இருப்பவர் கிறிஸ்து அரசர்!
ஒரு போர்த்துக்கீசிய நாவலில் வரக்கூடிய நிகழ்வு இது. ஜான் என்ற இளைஞன் கப்பலுக்கு வேலைக்குச் சென்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்செல்வம் திரட்டிக்கொண்டு, தன்னுடைய சொந்த ஊரான லிஸ்பனில் வந்து இறங்கினான். அப்போது அவனுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் உதித்தது. இப்படியே உறவினர்களது வீட்டிற்குச் செல்லாமல், கிழிந்த, அழுக்கான உடையில் செல்வோம். அப்போது அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, அதன்பிறகு அவர்களது வீட்டிற்குச் செல்வோம் என்று நினைத்துகொண்டு, ஒரு கிழிந்த அழுக்கான சட்டையும், ட்ரவுசரையும் போட்டுக்கொண்டு தன்னுடைய நெருங்கிய உறவினரான பட்ரோவின் வீட்டிற்குச் சென்றான்.
அங்கே அவரிடம், “கப்பலில் விபத்து ஏற்பட்டு, என்னிடம் இருந்த பணமெல்லாம் போய்விட்டது, இப்போது இந்த நிலைக்கு ஆளாகிவிட்டேன். அதனால் ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரைக்கும் இங்கே தங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டான். அதற்கு அவருடைய உறவினரோ, “என்னுடைய வீட்டில் போதுமான இடமில்லை, அதனால் தயவுசெய்து வேறொரு இடத்தில் போய்த் தங்கிக்கொள்” என்று சொல்லி விரட்டிவிட்டார்.
அவனும் சரி என்று சொல்லிவிட்டு, தன்னுடைய நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லாரிடமும் கேட்டுப்பார்த்தான். ஆனால், எல்லாருமே ஏதாவது ஒரு சாக்குப்போக்குச் சொல்லி, அவனுக்கு இடம் தராமல் விரட்டிவிட்டார்கள். இறுதியாக அவன், இனிமேலும் இவர்களை நம்பி எந்த பயனும் இல்லை’ என்று, தான் வைத்திருந்த பெரும் செல்வத்தை வைத்து, ஒரு மிகப்பெரிய மாடமாளிகை கட்டினான். அவனுக்கென்று பணியாளர்களை வைத்துக்கொண்டான். இதனால் சில நாட்களிலேயே, அவனுடைய செல்வச் செழிப்பைப் பற்றிய பேச்சு லிஸ்பன் நகர் முழுவதும் பரவியது.
இதைக் கேள்விப்பட்ட ஜானின் உறவினர்கள், நண்பர்கள் “இவையெல்லாம் முன்பே தெரிந்திருந்தால் அவனுக்கு வீட்டில் இடம் கொடுத்திருக்கலாமே” என்று வருத்தப்பட்டார்கள்.
மக்கள் நம்மிடம் பணம் இருந்தால் ஒருவிதமாக நடந்துகொள்வதும், பணம் இல்லையென்றால் வேறொரு விதமாக நடந்துகொள்வதும் நடக்கும் இக்காலத்தில், கிறிஸ்து அரசரின் பணியும், பாணியும் மிக வித்தியாசமாக நமக்கு தென்படுகிறது.
கிறிஸ்து அரசர் செல்வந்தராக இருந்தும், நமக்காக ஏழையானார். எல்லாம் நம்மீது வைத்த அன்புதான். கிறிஸ்து அரசர் எல்லா சூழ்நிலையிலும் நம்முடன் இருப்பவர். பலவீனத்தில் நம்மோடிருந்து, தன்னுடைய முழுஉடனிருப்பையும் தருபவர். மிகவும் நெருக்கமாக நம்மோடிருப்பவர். குறைகளில் நம்மை விட்டுவிட்டு ஓடாதவர். கூடவே இருந்து, குறைகளை நிறைவாக்கும் நல்அரசர் அவர்.
நாம் எப்போதும், மற்றவரோடு இருக்கும் நட்பை உருவாக்குவோம். பயன்படுத்திவிட்டு தூரே எறியும் கலாச்சாரத்தை, காணாமல் ஆக்குவோம். எப்போதும் இருந்து ஆறுதல் அளிக்கும், ஆற்றுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய புறப்படுவோம். அடுத்தவரின் குறைகளில் அவரைத் தூக்கி எறியாமல், அவரின் துயர்துடைக்க ஏற்பாடு செய்வோம். நிறைகளை கண்டு மனிதரிடம் பழகாமல், குறைகளிலே நிறைவடையும் பண்பை வளர்ப்போம். யாரையும் விலக்காத, கைவிடாத அரசர்களாக, அரசிகளாக வலம் வருவோம். நம் ஆட்சி இன்றிலிருந்து இனிதே இனிப்பையும், இன்பத்தையும் அனைவருக்கும் வழங்கட்டும்.
இறுதி செபம்:
ஆண்டவராகிய கிறிஸ்து அரசரே,
எங்கள் குடும்பங்களின் தலைவரே,
நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். நாங்கள் உம்மோடு என்றென்றும் ஒன்றித்திருக்க ஆசையாய் இருக்கிறீர். நீர் எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாய் இருக்கின்றீர். நீர் சக்கேயுவிடம் கூறியது போல 'இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று, எங்களிடமும் திருவுளம் மலர்ந்து சொல்வீராக. நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி, புகழ்ந்து எப்போதும் உமக்கு ஏற்புடையவர்களாக வாழ உதவியருளும். எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி, எங்கள் குடும்பங்களில் நிம்மதியும், சமாதானமும் நிலவச் செய்யும். ஆமென்.
🌹👑🌹👑🌹👑🌹👑
கிறிஸ்து அரசர் நவநாள்.
நாள்-5
தொடக்க செபம்:
ஓ இயேசுகிறிஸ்துவே! தேவரீரைச் சகலத்திற்கும் இராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன். படைக்கப்பட்ட சகல வஸ்துக்களும், உமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. என் பேரில் உமக்குள்ள சகல சுதந்திரங்களையும் பிரயோகித்து, என்னை ஆண்டு நடத்தியருளும். பசாசையும் அதனுடைய ஆரவாரங்களையும், அதனுடைய கிரியைகளையும் விட்டுவிடுகிறதாக நான் ஞானஸ்தானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டைப் புதுப்பிப்பதுடன், நல்ல கிறிஸ்தவனாகச் சீவிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். இயேசுவின் அர்ச்சிக்கப்பட்ட இராஜரீகத்தை ஏற்றுக்கொள்ளும்படிக்கும், அதன் வழியாய் உலகம் எங்கிலும் உலக சமாதானத்தின் ஆளுமை ஸ்தாபிக்கப்படும்படிக்கும், அற்பமாகிய என் கிரியைகளையெல்லாம் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
-- ஆமென்.
சிந்தனை:
கிறிஸ்து அரசரின் பணித் தலைமை!
பணித் தலைமை என்னும், புதிய தலைமைத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் ஆண்டவர் இயேசு. இன்றைய நாள்களிலும் ஆளுகை மேலாண்மைப் பாடங்களில், பணித் தலைமைத்துவத்தை ஓர் அவசிய பாடமாகவும், இன்றியமையா மாதிரியாகவும் காட்டுகின்றனர் தலைமைத்துவ வல்லுனர்கள். இயேசுவை அரசராகக் கொண்டாடும் இந்த நாளில் நமது சிந்தனையும், செயல்பாடும் அவ்வாறே இருக்க வேண்டும். இயேசு அறிமுகப்படுத்திய அரசாட்சி, இயேசு மாதிரி காட்டிய பணித் தலைமைத்துவம். இயேசுவைப் போல நாம் வாழ்கிறோமா என்று நம்மையே கேட்டுக்கொள்வோம்.
ஒவ்வொரு கணவரும், தம் மனைவியை எப்படி நடத்துகிறார் என்று சோதித்துப் பார்க்க வேண்டும். அதிகாரமும், அடிபணியச் செய்யும் ஆளுமையா, அல்லது பணிவிடை செய்யும் அன்பின் ஆளுகையா? அதிகாரிகள் தங்கள் ஊழியர்களை நடத்தும் விதம் எப்படி? பணித் தலைமையா, அல்லது அதிகாரத் தோரணையா? ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை நடத்தும் விதம், பங்குத் தந்தையர் பங்கு மக்களை நடத்தும் விதம்… இவை அனைத்திலும் நாம் இயேசுவைப் பின்பற்றி தலைவர்களாக இருக்கலாம், அல்லது அதிகாரமும் ஆணவமும் கொண்ட தலைவர்களாகவும் இருக்கலாம். என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்ன ஆண்டவர் இயேசுவிடமிருந்து பணித் தலைமைப் பண்பைக் கற்றுக்கொள்வோம்.
இறுதி செபம்:
ஆண்டவராகிய கிறிஸ்து அரசரே,
எங்கள் குடும்பங்களின் தலைவரே,
நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். நாங்கள் உம்மோடு என்றென்றும் ஒன்றித்திருக்க ஆசையாய் இருக்கிறீர். நீர் எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாய் இருக்கின்றீர். நீர் சக்கேயுவிடம் கூறியது போல 'இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று, எங்களிடமும் திருவுளம் மலர்ந்து சொல்வீராக. நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி, புகழ்ந்து எப்போதும் உமக்கு ஏற்புடையவர்களாக வாழ உதவியருளும். எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி, எங்கள் குடும்பங்களில் நிம்மதியும், சமாதானமும் நிலவச் செய்யும். ஆமென்.
🌹👑🌹👑🌹👑🌹👑
கிறிஸ்து அரசர் நவநாள்.
நாள்-6
தொடக்க செபம்:
ஓ இயேசுகிறிஸ்துவே! தேவரீரைச் சகலத்திற்கும் இராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன். படைக்கப்பட்ட சகல வஸ்துக்களும், உமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. என் பேரில் உமக்குள்ள சகல சுதந்திரங்களையும் பிரயோகித்து, என்னை ஆண்டு நடத்தியருளும். பசாசையும் அதனுடைய ஆரவாரங்களையும், அதனுடைய கிரியைகளையும் விட்டுவிடுகிறதாக நான் ஞானஸ்தானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டைப் புதுப்பிப்பதுடன், நல்ல கிறிஸ்தவனாகச் சீவிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். இயேசுவின் அர்ச்சிக்கப்பட்ட இராஜரீகத்தை ஏற்றுக்கொள்ளும்படிக்கும், அதன் வழியாய் உலகம் எங்கிலும் உலக சமாதானத்தின் ஆளுமை ஸ்தாபிக்கப்படும்படிக்கும், அற்பமாகிய என் கிரியைகளையெல்லாம் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
-- ஆமென்.
சிந்தனை:
கிறிஸ்து அரசரின் வல்லமை!
இந்த பூமியை எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களால் ஒரு நாடு, மொழி, இனம், கண்டம் போன்றவற்றின் மீது மட்டுமே உரிமை கொண்டாட முடிந்தது. ஆனால், இயேசு அனைத்துலகின் அரசர். மண்ணக அரசர்கள் தம் நிலப் பரப்பளவையும், அதில் வாழும் மக்களையும் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவர். தம் நிலப் பரப்பளவைப் பெரிதாக்கும் நோக்குடன் போர்கள் புரிந்து, பல மாசற்றவர்களின் இரத்தத்தைச் சிந்தியுள்ளனர். இரண்டாம் உலகப் போரின்போது பல நாடுகள், மற்ற நாடுகளைத் தமதாக்கும் முனைப்போடு செயல்பட்டமையால், பல்லாயிரம் மனித உயிர்கள் பறிக்கப்பட்டன என்பது வரலாறு. மண்ணக அரசர்கள், தாங்கள் ஆட்சியுரிமை கொண்டாடும் நிலத்தை நன்கொடையாகவோ, வாரீசுரிமையாகவோ, பிறரிடமிருந்து பறித்தே பெற்றுக் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் அவற்றை ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கவில்லை. இயேசுவால், இயேசுவில் படைப்பனைத்தும் உருவாக்கம் பெற்றது. படைத்த அவர் தொடர்ந்து புதுப்பிக்கின்றார், பாதுகாக்கின்றார், அதன் முழுமைக்கு அழைத்துச் செல்கின்றார். இயேசு என்ற அரசர், பூமிக்கும் கட்டளையிட்டு பூமியின் முகத்தைப் புதுப்பிக்கின்றார். கடலைப் பார்த்து இரையாதே (மாற் 4:39) என்று அவரால் கூற முடியும். அந்த இடத்தைத் தாண்டி வராதே என்று, அலைகளுக்கும் எல்லைக்கோடு வகுக்க முடியும் (யோபு 38:8). கடலையே பிளந்து மக்களுக்கு வழியமைக்க முடியும் (விப 14:21). பாலைவனத்தைச் சோலைவனமாக்க முடியம் (எசா 41:18). மக்கள் செல்லுமிடமெல்லாம் நிழல் தரும் மரங்களை உருவாக்க முடியும் (எசா 41:19). வாழ்வுகொடுப்பவன் அரசன். பல அரசுகளுக்கு வாழ்வு கொடுப்பவன் பேரரசன். இயேசுவோ பேரரசர்களுக்கெல்லாம் அரசர். உலக அரசுகள் அனைத்தும் அவரது எல்லைக்கோட்டில் வலம் வருகின்றன (திப 24:1). உலகின் மாமன்னர்களையும் நியமனம் செய்யும் தகுதி படைத்தவர் கிறிஸ்து அரசர்.
இறுதி செபம்:
ஆண்டவராகிய கிறிஸ்து அரசரே,
எங்கள் குடும்பங்களின் தலைவரே,
நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். நாங்கள் உம்மோடு என்றென்றும் ஒன்றித்திருக்க ஆசையாய் இருக்கிறீர். நீர் எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாய் இருக்கின்றீர். நீர் சக்கேயுவிடம் கூறியது போல 'இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று, எங்களிடமும் திருவுளம் மலர்ந்து சொல்வீராக. நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி, புகழ்ந்து எப்போதும் உமக்கு ஏற்புடையவர்களாக வாழ உதவியருளும். எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி, எங்கள் குடும்பங்களில் நிம்மதியும், சமாதானமும் நிலவச் செய்யும். ஆமென்.
🌹👑🌹👑🌹👑🌹👑
கிறிஸ்து அரசர் நவநாள்
நாள்-7
தொடக்க செபம்:
ஓ இயேசுகிறிஸ்துவே! தேவரீரைச் சகலத்திற்கும் இராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன். படைக்கப்பட்ட சகல வஸ்துக்களும், உமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. என் பேரில் உமக்குள்ள சகல சுதந்திரங்களையும் பிரயோகித்து, என்னை ஆண்டு நடத்தியருளும். பசாசையும் அதனுடைய ஆரவாரங்களையும், அதனுடைய கிரியைகளையும் விட்டுவிடுகிறதாக நான் ஞானஸ்தானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டைப் புதுப்பிப்பதுடன், நல்ல கிறிஸ்தவனாகச் சீவிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். இயேசுவின் அர்ச்சிக்கப்பட்ட இராஜரீகத்தை ஏற்றுக்கொள்ளும்படிக்கும், அதன் வழியாய் உலகம் எங்கிலும் உலக சமாதானத்தின் ஆளுமை ஸ்தாபிக்கப்படும்படிக்கும், அற்பமாகிய என் கிரியைகளையெல்லாம் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
-- ஆமென்.
சிந்தனை:
கிறிஸ்து அரசரின் அரசு நிலையானது!
(தானி 7:13-14)
திருவிவிலியம், அவரது ஆட்சியுரிமை என்றுமுள்ளது; முடிவற்றது; அழிந்து போகாது என்றுரைக்கின்றது. அவரே முதலும் முடிவும், நேற்றும் இன்றும், நாளையும் மற்றும் என்றென்றும். அனைத்தையும் துவக்கி வைத்தவரும், அனைத்தையும் சிறப்பான முடிவுக்கு இட்டுச்செல்பவரும் அவரேதான். உலகத்தின் முதன்மை ஆள்களாக ஆட்சிசெய்ய விரும்பிய மாமன்னர்கள் அனைவரும் அழிந்து போயினர். காலம், நேரம், இடம் போன்ற அனைத்தையும் வெற்றிகொண்டு வாழும் அரசர் இயேசு. அவரது அரசு மண்ணைச் சார்ந்ததாக இருந்திருந்தால், மண்மீது நடக்கும் மாற்றங்கள் அதை உருக்குலைத்திருக்கும். உலகம் சார்ந்ததாக இருந்திருந்தால், அன்றாடம் பல பந்திகள் பரிமாறவும், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்க மாளிகைகளை உருவாக்கவும், ஏழைகளின் உழைப்பு சுரண்டப்பட்டிருக்கும். படையைச் சார்ந்தாக இருந்திருந்தால், புதுப்புது படைக்கருவிகளை உருவாக்க வேண்டியிருக்கும். அவற்றைப் பயன்படுத்தவும், பராமரிக்கவும் முப்படைகள் தேவைப்பட்டிருக்கும். உலகம் சார்ந்ததாக இருந்திருந்தால் தங்கமும், வைடூரியங்களும், வைரங்களும் அதன் அரண்மனையை அழகு செய்திருக்கும். அதுவே அரசியல் தலைமையாக இருந்திருந்தால், பதவியைத் தக்கவைக்கப் பல மதிப்பீடுகளைப் பலியாக்க வேண்டியிருக்கும்.
ஆனால், மானிட மனங்களைச் சார்ந்திருப்பதால், அது நித்தியத்திற்கும் நிலைகொள்ளும். அன்பே அதன் சட்ட வடிவம். அந்த அன்பிற்குள் அனைத்தும் அடக்கம். மருத்துவர்கள் இல்லாமல், மருந்துகளைப் பயன்படுத்தாமல், இந்த அரசர் அத்தனை நோய்களையும் ஒருவார்த்தையால் உடனடியாகவும், நிரந்தரமாகவும் குணப்படுத்துவார். யாராலும் தோற்கடிக்கப்படாத சாவும், அவரால் தோல்வியுறும். அவரது வார்த்தைகள் பலருக்கும், வாழ்வு தரும் உயிராற்றலைத் தன்னகத்தே கொண்டவை. அதில் நீதிமன்றங்கள் இல்லை, யாருக்கும் தண்டனைத் தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை. எனவே, சிறைச்சாலைகள் இல்லை. அரசியல் உலகில் மனசாட்சியை உலுக்கி வழிநடத்தும் பேரரசன் இயேசு. எல்லாப் பேரரசர்களும் அவர்முன் மண்டியிடத் தயங்குவதில்லை. போரினால் பெற்றுக்கொண்ட அல்லது வெற்றி கொண்ட அரசு அதுவல்ல என்பதால், பிலாத்து முன் படைக்கருவிகளோ, படைவீரர்களோ இன்றி வாதிடுகின்றார். பிலாத்துவும் தீர்ப்பளிக்கத் தடுமாறுகின்றான்.
இறுதி செபம்:
ஆண்டவராகிய கிறிஸ்து அரசரே,
எங்கள் குடும்பங்களின் தலைவரே,
நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். நாங்கள் உம்மோடு என்றென்றும் ஒன்றித்திருக்க ஆசையாய் இருக்கிறீர். நீர் எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாய் இருக்கின்றீர். நீர் சக்கேயுவிடம் கூறியது போல 'இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று, எங்களிடமும் திருவுளம் மலர்ந்து சொல்வீராக. நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி, புகழ்ந்து எப்போதும் உமக்கு ஏற்புடையவர்களாக வாழ உதவியருளும். எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி, எங்கள் குடும்பங்களில் நிம்மதியும், சமாதானமும் நிலவச் செய்யும். ஆமென்.
🌹👑🌹👑🌹👑🌹👑
கிறிஸ்து அரசர் நவநாள்
நாள்-8
தொடக்க செபம்:
ஓ இயேசுகிறிஸ்துவே! தேவரீரைச் சகலத்திற்கும் இராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன். படைக்கப்பட்ட சகல வஸ்துக்களும், உமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. என் பேரில் உமக்குள்ள சகல சுதந்திரங்களையும் பிரயோகித்து, என்னை ஆண்டு நடத்தியருளும். பசாசையும் அதனுடைய ஆரவாரங்களையும், அதனுடைய கிரியைகளையும் விட்டுவிடுகிறதாக நான் ஞானஸ்தானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டைப் புதுப்பிப்பதுடன், நல்ல கிறிஸ்தவனாகச் சீவிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். இயேசுவின் அர்ச்சிக்கப்பட்ட இராஜரீகத்தை ஏற்றுக்கொள்ளும்படிக்கும், அதன் வழியாய் உலகம் எங்கிலும் உலக சமாதானத்தின் ஆளுமை ஸ்தாபிக்கப்படும்படிக்கும், அற்பமாகிய என் கிரியைகளையெல்லாம் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
-- ஆமென்.
சிந்தனை:
கிறிஸ்துவின் அரசில் அன்பே ஆட்சிமொழி!
கிறிஸ்துவின் அரசைப் பாதுகாக்கப் போர்ப்படை இல்லை. போர்ப்பயிற்சி அங்கு வழங்கப்படுவதில்லை. போர் என்ற சொல்லே அதன் அகராதியில் இல்லை. அது தேவையும் இல்லை. அன்பே அதன் ஆட்சிமொழி, இரக்கமே அதன் இதயப்பாசறை, சகோதரத்துவ உணர்வே அதன் பக்திஸ்வரம். உண்மையும், நேர்மையும் அதன் அணிகலன்கள், நீதியே அதன் அன்றாட உணவு. ஏழை எளியோர், உடைத்து நொறுக்கப்பட்டு சமுதாயத்தின் கடைநிலையில் வாழ்வோர் அதன் இளவரசர்கள். வன்முறையின் வழக்கு அதற்குத் தெரியாது. பகைவர்கள் என்று எவரும் இல்லை. அது புனித மணம் கமழும் புண்ணிய பூமி. பாவம் அங்கு தம் முகத்தைக் காட்டுவதில்லை. குற்றவாளிகளின் குறைகளை இயேசு என்ற அரசனே துடைத்தெடுக்கின்றார். அன்பே அதன் அடிப்படை சாசனமாக இருப்பதால், பொருள் உடையோர், இல்லாதவர்களுடன் தம் சொத்துக்களைக் பகிர்ந்து கொள்கின்றனர். பகிர்ந்துகொள்ள ஆளில்லாத சமயத்தில், பசித்திருப்போருக்கு கடவுளே உணவளிப்பார்.
வரலாற்றில் சில அரசர்களை உருவாக்கிய மக்களே, அவர்களை அரியணைகளிலிருந்து அகற்றியுள்ளனர். அவர்கள் பொதுநலவாதிகளாக இருந்தபோது முடிசூடிய மக்கள், அவர்களின் ஆட்சியை சுயநலம் சிதைத்தபோது, அவர்களைத் தூக்கி எறிந்துள்ளனர். ஆனால், கிறிஸ்துவுக்கு மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உள்ளது. தம் மக்களின் நலனுக்காகத் தம்மையே செலவிடுவதில், இயேசுவைத் தவிர பெரியவர் எவரும் இல்லை. தம்மைத் தாக்கியவரையும் குணமாக்கும் (திவெ 1:7), கொலைஞரான நூற்றுவர் தலைவனையும் மனம்மாற்றும், திருடனுக்கும் வாழ்வளிக்கும், உதறிச்செல்பவர்களையும் ஏற்றுக்கொள்ளும், கொலைசெய்யத் துடிப்பவர்களையும் மனமாற்றும் மகான் அவர். அதிகாரமும், மணிமுடியும், அரியணையும் உலக அரசனை அலங்கரிக்கலாம். ஆனால், இயேசு அன்புக்கு அடிமை. அனைவருக்கும் அன்புப் பணியாற்றுவதே அவரது பெருமை. பிலாத்து வேறுவழியின்றி, இயேசுவைச் சாவுக்குக் கையளிக்கின்றார். இயேசு இந்த இடத்தில் மௌனித்தாலும் இது உண்மைக்கும், வாழ்வுக்கும், அன்புக்கும் கிடைத்த வெற்றியாகும். இயேசுவிடம் இருந்த சிறப்பான்மையை உணர்ந்தமையால் தான் பிலாத்து, இயேசு யூதர்களின் அரசன் என்று எழுதி, நான் எழுதியது எழுதியதே என்று அவர், உண்மையிலே அரசர் என்று அறிக்கையிடுகின்றார்.
இறுதி செபம்:
ஆண்டவராகிய கிறிஸ்து அரசரே,
எங்கள் குடும்பங்களின் தலைவரே,
நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். நாங்கள் உம்மோடு என்றென்றும் ஒன்றித்திருக்க ஆசையாய் இருக்கிறீர். நீர் எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாய் இருக்கின்றீர். நீர் சக்கேயுவிடம் கூறியது போல 'இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று, எங்களிடமும் திருவுளம் மலர்ந்து சொல்வீராக. நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி, புகழ்ந்து எப்போதும் உமக்கு ஏற்புடையவர்களாக வாழ உதவியருளும். எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி, எங்கள் குடும்பங்களில் நிம்மதியும், சமாதானமும் நிலவச் செய்யும். ஆமென்.
☦️ கிறிஸ்து அரசர் நவநாள்
நாள்-9
தொடக்க செபம்:
ஓ இயேசுகிறிஸ்துவே! தேவரீரைச் சகலத்திற்கும் இராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன். படைக்கப்பட்ட சகல வஸ்துக்களும், உமக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. என் பேரில் உமக்குள்ள சகல சுதந்திரங்களையும் பிரயோகித்து, என்னை ஆண்டு நடத்தியருளும். பசாசையும் அதனுடைய ஆரவாரங்களையும், அதனுடைய கிரியைகளையும் விட்டுவிடுகிறதாக நான் ஞானஸ்தானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டைப் புதுப்பிப்பதுடன், நல்ல கிறிஸ்தவனாகச் சீவிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். இயேசுவின் அர்ச்சிக்கப்பட்ட இராஜரீகத்தை ஏற்றுக்கொள்ளும்படிக்கும், அதன் வழியாய் உலகம் எங்கிலும் உலக சமாதானத்தின் ஆளுமை ஸ்தாபிக்கப்படும்படிக்கும், அற்பமாகிய என் கிரியைகளையெல்லாம் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
-- ஆமென்.
சிந்தனை:
_*நமக்காகத் தம் உயிரையே பணயமாக்கும் கிறிஸ்து அரசர்!*_
இயேசு விரும்பியிருந்தால், பிலாத்துவின் முன் ஒரு புதுமை செய்து விடுதலை அடைந்திருக்கலாம். அங்குள்ள கற்களை அப்பமாக்கி, மக்களின் வயிரை நிறைத்து தம் பக்கம் கவர்ந்திழுத்திருக்க முடியும். சதுசேயர்களைச் சாபமிட்டு, அவர்கள் பொய்குற்றம் சுமத்தாதபடி செய்திருக்க முடியும். படைவீரர்கள், யாரும் தம்மைத் தாக்காதவாறு தடுத்திருக்க முடியும். பின்வாங்கித் தரையில் விழுந்த போர்வீரர்கள், மீண்டும் எழாமல் செய்திருக்க முடியும். தனது உடலில், ஒரு கசையடியும் விழாமல் பார்த்திருக்க முடியும். சிலுவையில் அறையப்பட்டபோது, அதிலிருந்து கீழே இறங்கி நடந்து வந்திருக்க முடியும். யாரும் எளிதில் கொடுக்க முன் வராத தம் உயிரையே தியாகமாக்குவதால், அவர் உலகின் கண்முன் உயர்ந்து நிற்கின்றார். உலக அரசர்கள் பொதுவாக, படைவீரர்கள் பலரைப் பணயமாக்கி, தம் உயிரைக் காப்பாற்ற உழைப்பர். பெரிய ஏரோது தன்னை பாதுகாக்க, ஒரு பெரும் படையே வைத்திருந்தார். ஆனால், இயேசு என்ற அரசன் தியாகத்தின் முழுமதி. தற்கையளிப்பில் தலைசிறந்தோன்.
கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பணிக்காகத் தம்மையே பணயம் வைத்த, அவரே உண்மையான சாட்சி. அவரது வாழ்க்கை முழுவதும், உலகிற்குப் பயிற்சிப் பாசறைதான். அவரது உயிர்த்தியாகத்தைவிட வேறு எதுவும் சிறப்பானது இருக்கப்போவதில்லை. அந்த மாபெரும் தியாகத்திற்குப் பரிசாகக் கடவுள் அவரைக் கல்லறையிலிருந்து எழுப்பி, அனைத்திற்கும் அனைவருக்கும் அரசனாக்குகின்றார். உலக மக்களின் இதயத்திலிருந்து ஆட்சி நடத்தும் மாபெரும் மன்னன். எனவே, மனசாட்சியின்படி ஆட்சி நடத்தும் அத்தனை அரசர்களுக்கும் கீழ்ப்படிவது கிறிஸ்தவனின் கடமையாகும் (உரோ 13:1-7).
இறுதி செபம்:
ஆண்டவராகிய கிறிஸ்து அரசரே,
எங்கள் குடும்பங்களின் தலைவரே,
நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். நாங்கள் உம்மோடு என்றென்றும் ஒன்றித்திருக்க ஆசையாய் இருக்கிறீர். நீர் எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாய் இருக்கின்றீர். நீர் சக்கேயுவிடம் கூறியது போல 'இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று, எங்களிடமும் திருவுளம் மலர்ந்து சொல்வீராக. நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி, புகழ்ந்து எப்போதும் உமக்கு ஏற்புடையவர்களாக வாழ உதவியருளும். எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி, எங்கள் குடும்பங்களில் நிம்மதியும், சமாதானமும் நிலவச் செய்யும். ஆமென்.
👑 கிறிஸ்து அரசருக்கு நவநாள் செபம்.
ஓ! இயேசுகிறிஸ்துவே! தேவரீரைச் சகலத்திற்கும் இராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன். படைக்கப்பட்ட சகல வஸ்துக்களும் உமக்காகவே சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன. என் பேரில் உமக்குள்ள சகல சுதந்திரங்களையும் பிரயோகித்து என்னை ஆண்டு நடத்தியருளும்.
பசாசையும் அதனுடைய ஆரவா ரங்களையும் அதனுடைய கிரியைகளையும் விட்டுவிடுகிறதாக நான் ஞானஸ்நானத்தில் கொடுத்த வார்த்தைப் பாட்டைப் புதுப்பிப்பதுடன், நல்ல கிறிஸ்தவனாகச் சீவிப்பேன் என்றும் உறுதியளிக் கிறேன். இயேசுவின் அர்ச்சிக்கப்பட்ட இராஜரீகத்தை ஏற்றுக்கொள்ளும்படிக்கும் அதன் வழியாய் உலகம் எங்கிலும் உலக சமாதானத்தின் ஆளுமை ஸ்தாபிக்கப்படும்படிக்கும், அற்பமாகிய என் கிரியைகளையெல்லாம் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
-ஆமென்.
Comments
Post a Comment