சதா சகாய மாதா ஜெபம் & புகழ்மாலை
- Get link
- X
- Other Apps
சதா சகாய மாதா ஜெபம் & புகழ்மாலை |
இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக
பாரம்பரியத்தின் மூலம்அறியப்படுகிறது. ஆனால் இதில் இடம்பெற்றுள்ள தூய மிக்கேல் அதிதூதர்
மற்றும் தூய கபிரியேல் அதிதூதர் மற்றும் பைசன்டின் முறை கிரேக்கஎழுத்துக்கள் தூய லூக்காவின
ஓவியத்தில் இல்லாததால் அதைத் தழுவி இவ் ஒவியம் கீழ்திசை கலைப் பண்பிலிருந்து வந்திருக்கக் கூடும்
என்றுஅறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்த ஓவியமானது 1325-1480 ஆண்டுகளுக்குள் தீட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர்.
கீரிட் தீவிலிருந்துபதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமைக்குக் கொண்டுவரப்பட்டது.
இதன் வருகைக்குப் பிறகு, உரோமையில் பல அற்புத நிகழ்ச்சிகள்நடைபெற்றன.
தேவதாய் ஒரு சிறுமிக்குக் காட்சியளித்தது அவற்றுள் ஒன்றாகும்.
தேவதாய் அந்தச் சிறுமியிடம், தனது அற்புத ஓவியமானதுஉரோமையில் உள்ள புனித மரியன்னையின்
பேராலயத்துக்கும் புனித யோவான் லாத்தரன் பேராலயத்துக்கும் இடையேஅமைக்கப்படவேண்டுமென்று
கேட்டுக்கொண்டாள். இவ்விரு பேராலயத்துக்குமிடையே புனித மத்தேயுவின் ஆலயம் அமைந்திருந்தது.
புனிதஅகுஸ்தீன் சபைக்குருக்கள் அதைக் க கண்காணித்து வந்தனர்.
இந்த ஆலயத்தின் பீடத்துக்குமேல் அந்தப் புனித படம் ஸ்தாபிக்கப்பட்டது.
மூன்று நூற்றாண்டுகளாக (1499-1798) இந்த அற்புதப் படம் தூய மத்தேயு ஆலயத்தில் வணங்கப்பட்டு வந்தது.
கிரீட் தீவில் இப்படத்திற்கு என்னபெயர் வழங்கப்பட்டது என்பதை நாமறியோம்.
ஆனால் உரோமையில் 'இடைவிடா சகாயத்தாய்' எனும் பெயரில் அழைக்கபட்டது.
ஏனெனில்தேவதாய் அந்த சிறுமிக்கு அளித்த காட்சியில், தனது படம் மக்களின் வணக்கத்துக்கு
உரியதாக்கப்பட வேண்டும் என்று அறிவித்தபோதுதான்'இடைவிடா சகாய மாதா' என்று தெரிவித்தாள்.
அன்றிலிருந்தே நாம் அவ்வன்னையை 'இடைவிடா சகாயமாதா' அல்லது 'சதா சகாயமாதா'
என்றழைத்துவருகிறோம். 1798ஆம் ஆண்டு புனித மத்தேயுவின் தேவாலயம் பிரஞ்சுக்காரரின்
படையெடுப்பால் அழிக்கப்பட்டது. அதைக்கண்காணித்து வந்த புனித அகுஸ்தின் சபைக்குருக்கள்
இந்த படத்தை அன்மையில் இருந்த ஒரு துறவற மடத்துக்கு மாற்றினார்கள்.
அதன்பின்னர்போஸ்தெருவா நகரில் உள்ள புனித மரியன்னையில் 'செபக்கூடம்'
எனப்படும் தங்கள் செபக்கூடத்தில் அமைத்தனர். அங்கு 1866 வரை இந்தப் படம்மறைந்திருந்தது.
இந்நிலையில் அழிக்கப்பட்ட புனித மத்தேயுவின் பழைய ஆலயம் இருந்த இடத்தில்
இரட்சகர் சபைக் குருக்களால் தூய அல்போன்சா ஆலயம்புதிதாகக் கட்டப்பட்டது.
இறைவனது கருணை நிறைந்த பராமரிப்பின பயனாக இந்த அற்புதப் படம் கண்டுபிடிக்கப்பட்டது.
புனித பாப்பரசர் 9-ம்பத்திநாதர் இந்தப் படத்தின் வரலாற்றை அறிந்து,
அவருடைய கட்டளையின் பேரில் 1866ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29ஆம் நாள்
திருப் பவனியாகஎடுத்துவரப்பட்டு தூய அல்போன்சா ஆலயத்தில் மறுபடியும்
மகிமைக்குரிய அதன் பழைய இடத்திலேயே நிறுவப்பட்டது.
அதன் பாதுகாப்பையும்இரட்சகர் சபைக் குருக்களிடம் ஒப்டைத்தார்.
அந்த சமயத்தில்தான் இந்தப் படத்துக்குரிய வணக்கத்தை உலகெங்கும் பரப்பும்படி
இடைவிடாசகாயத்தாயை அனைத்துலகும் அறியும்படி செய்யுங்கள்
என்று கட்டளையிட்டார். அன்றுமுதல் இரட்சகர் சபைக் குருக்கள் தம் சிரமீது
கொண்டுதம்மால் இயன்ற அளவு முயன்று, இந்தப் பக்தியைப் பரப்பி வருகின்றனர்.
படத்தின் விளக்கம்:
இந்தப்படத்தில் நான்கு உருவங்களும் பைசைன்டின் முறை கிரேக்க எழுத்துக்களும்
காணப்படுகின்றன. தூய கன்னிமரியாள், இறைமகன் குழந்தைஇயேசு, தூய மிக்கேல் அதிதூதர்,
தூய கபிரியேல் அதிதூதர் ஆகிய நால்வருமாவர். அன்னை கன்னிமரியாள் சிகப்பு நிற மேலாடையையும்
கரு நீலநிற மேல்அங்கியையும் அணிந்திருப்பதைக் காண்கிறோம். அன்னையின் முக்காடிட் ட
உடையில் அழகிய நட்சத்திரமும் அதன் அருகில் நட்சத்திரவடிவில் சிலுவையும் காணப்படுகின்றன.
அன்னையின் தலையில் எட்டு முத்துக்கள் பதித்த கிரிடமும் அதன் வழியாக வரும் கதிர்களும்கிரிடத்தை
அலங்கரிக்கின்றன. தலையைச் சுற்றி காணப்படும் வட்ட வடிவிலான புனிதர்களை குறிக்கும் கதிர்
வடிவிலான தட்டானது தங்கஆபர்ணங்களுடன் வடிவமைப்பு
செய்யப்பட்ட ஓவியம் சில படங்களில் காணப்படவில்லை.
தூய மிக்கேல் அதிதூதரின் (இடது) கையில் ஈட்டியும், கோலும், கடற்பஞ்சும்,
கிண்ணத்தில் புளித்த திராட்சை இரசமும் உள்ளன. இவை இயேசுவின்பாடுகளை நினைவுகூறும்
பொருட்களாக அமைந்துள்ளது. தூய கபிரியேல் (வலது) அதிதூதரின் கையில் சிலுவை உள்ளது.
இச் சிலுவையானதுஇயேசு கிறிஸ்து படப்போகும் பாடுகளைக் குறித்துக்காட்டுகிறது.
குழந்தை இயேசு பச்சை நிறத்தில் மேலாடையையும் சிகப்பு நிறத்தில் இடை
கச்சையையும் அரக்கு நிறத்தில் அங்கியையும் அணிந்திருப்பதைக்காணலாம்.
குழந்தை இயேசுவின் இடது காலில் காலணியோடு இருப்தையும் வலது கால் காலணி
கழன்று தொங்கிக்கொண்டிருப்தையும்காணலாம். யூத பாரம்பரியத்தில் பாதங்களை காட்டுவது
என்பது மனித இயல்பை வெளிப்படுதுவதாகும்.
இங்கே இறைமகன் மனிதனாகஅவதரிப்பதைக் குறித்துக்காட்டுகிறது.
மீட்பின் மறைபொருள்:
இந்தப் படமானது அழகுநிறைந்த காட்சிப் பொருளாக காணப்படுவதோடு மட்டுமல்லாமல்
கிறிஸ்தவ கோட்பாடுகளையே உள்ளடக்கிய ஆழமிக்கவிசவாச மறைபொருளை உள்ளடக்கியதாகும்.
இந்தப்படத்தில் காணப்படும் உருவங்களும் பொருட்களும் கடவுள் நம்மோடு இருந்து நமதுதுன்பத்திலும்
நம்மை எப்படி வழிநடத்துகிறார் என்பதையும், அன்னை கன்னிமரியாளின் பரிந்துபேசுதலும்,
கடவுளின் மாட்சியும், அதிதூதர்களின்பாதுகாவலையும் நமக்குத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன.
கடவுளின் தம் வாக்குத்தத்தத்தின்படி இறைமகன் இயேசு அன்னைகன்னிமரியாள் வழியாக இந்த
உலகில் அவதரித்ததையும், அத்தூய மகன் தம் அன்னையை சிலுவையின் அடியில்
சீடர் யோவானிடம் "இதோ உம்தாய்" என்று நம் அன்னையாக கொடுக்கின்றார். இத்தகைய
மாட்ச்சிமையை பெற்ற கன்னிமரியாய் இப்படத்தின் பெரும் பகுதியைக்கொண்டிருந்தாலும்
இப்படத்தின் மையமாக அமைவது இயேசு கிறிஸ்துவே. இயேசுவின் கையும் அன்னை
கன்னிமரியாளின் கையும்இணைந்திருக்கும் விதமானது "இயேசு கிறஸ்துவே உலகின் மீட்பர்"
என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம் அமைந்துள்ளது. அன்னை கன்னிமரியாள்இறைமகன்
இயேசுவையே மீட்பராகச் சுட்டிக்காட்டுகின்றாள். இறைமகன் இயேசு இங்கே செம்மரியாக
சுட்டிக்காட்டபடுகின்றார். படத்தின்அமைப்பும், தோற்றமும் மற்றும் அன்னையின் சோகம்
படிந்த முகம், மற்றும் படத்தில் காணப்படும் பொருள்கள் யாவும் இயேசுவின் துன்ப கலந்தபாதையில்
சிலுவைச்சாவு வரை செல்லவேண்டும் என்பதை நினைவுபடுத்தும் வண்ணமாய் அமைகின்றன.
அதேவேளையில் குழந்தைஇயேசுவின் தளர்ச்சி அடையாத முகமும் தம் சாவின் வழியாக
மாட்சியுடன் உயிர்த்து வெற்றிகொள்வேன் என்பதை தங்கநிற பின்னணியும்ஒளிக்கதிர்களும்
படம் பிடித்துக்காட்டுகின்றன.
சதா சகாய மாதா நவ நாள் ஜெபம்
சதா சகாய மாதாவே உம்மிடத்தில் சரணடைந்து நம்பிக்கையுடன் உமது பாதத் தண்டையில் இருக்கும் நீசப்பாவியான என்னை உற்று நோக்கி அருளும். இரக்கத்தின் மாதாவே என் பேரில் இரக்கமாயிரும். பாவிகளின நம்பிக்கையும் என எல்லோராலும் அழைக்கப்படுகிற நீரே என் அடைக்கலமும் நம்பிக்கையுமாய் இரும் . இயேசுநாதரின் சிநேகத்துக்காக எனக்கு சகாயம் புரிந்தருளும் . சதாகாலமும் உமது பிள்ளையாகப் பாராட்டி உமக்குக் கையளிக்கும் இந்த நீச பாவியாகிய என்னிடம் உமது கரங்களை நீட்டியருளும் . உம்மிலே நம்பிக்கை வைப்பது தான் நித்திய ஈடேற்றத்தின் பிணை என்று நான் நம்புகிறேன். நான் உம்மில் வைக்கும் இந்த நம்பிக்கையைச் சர்வேசுரன் தமது இரக்கத்தால் எனக்குத் தந்ததற்காக நான் அவரை வாழ்த்தி துதிக்கிறேன் . உம்மிடம் சரண் அடையாததினால் இவ்வளவு காலமும் நான் அநேக தடவை நீசத்தனமாய்ப் பால சோதனைகளில் விழுந்திருக்கிறேன் . ஆனால் உமது உதவியினால் நான் வெற்றி அடைவேன் என்று எனக்குத் தெரியும். என்னை உமக்கு நான் கையளித்தால் , நீர் எனக்கு உதவி செய்வீர் என்றும் எனக்குத் தெரியும் . ஆனால், விழப் போகும் தறுவாயில் உமது உதவியைக் கேளாமல் விட்டு விடுவேனோ என்றும், அதனால் என் ஆத்துமத்தை இழந்து போக நேரிடுமோ என்றும் அஞ்சுகிறேன்.
ஆகையால், இந்த வரப்பிரசாதத்தை நீர் எனக்கு பெற்றுத் தரும் படி உம்மை வேண்டி எனக்குத் தெரிந்த முறையிலும் என்னால் இயன்ற அளவிலும் உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.அதாவது நரகம் என்னுடன் போர் பொருதும் போது உம்மிடம் நான் சரண் புகவும் , " ஓ! மரியா யே / எனக்கு உதவி செய்யும். சதா சகாய மாதாவே எனது ஆத்துமத்தை நான் இழந்து போக விட்டு விடாதேயும் " என்று உம்மை நோக்கிச் சொல்லவும் கிருபை செய்தருளும். ஆமென். (அருள் நிறை... 9 முறை)
புனித மரியா யே கஸ்திப்படுகிறவர்களுக்கு உமது சகாயம் தந்தருளும் . மனத்திடன் இல்லாதவர்களுக்கு உறுதியாய் இருந்து உதவி புரிந்தருளும். அழுகிறவர்களை மகிழச் செய்யும் .. பொது ஜனத்துக்காக மன்றாடியருளும். குருக்கள், ஆயர்களுக்காக பரிந்து பேசிய ருளும். . கடவுளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்த சன்னியாசிகள் கன்னியர்களுக்காகவும் மனுப் பேசிய ருளும். உமது சதா சகாயத்தை நாடுவோர் உமது உதவியை உணரச் செய்தருளும். .
ஓ மாதாவே! நீர் எங்களுக்கு அடைக்கலமாய் இருக்கிறீர்
குறைகளிலும் துன்பங்களிலும் உதவியாகவும் இருக்கிறீர்
செபிப்போமாக
ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து உமது மாதாவாகிய மரியாயை எப்பொழுதும் உதவி செய்யத் தயாராக இருக்கும் தாயாக எங்களுக்குத் தந்தருள சித்தமானீ ரே! அவருடைய அற்புதமான சாயலை வணங்கி அன்னைக்குரிய உதவியை மிகவும் ஆவலுடன் வேண்டி நிற்கும் நாங்கள் உம்முடைய இரட்சண்யத்தின் பலனைச் சதாகாலமும் அனுபவிக்கத் தகுதி உள்ளவர்களாய் இருக்க கிருபை செய்யும்படி தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். சதாகாலமும் சீவியருமாய் இராட்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வேசுரா ஆமென்.
பரிசுத்த பாப்பரசருக்காக 1 பர. அரு. திரி.

சதா சகாய மாதாவுக்கு ஜெபம்
சதா சகாய மாதnவே உமது பிள்ளைகளுக்காக வேண்டிக் கொள்ளும்.
அதிபரிசுத்த கன்னி மரியாயின் புனித மாசில்லாத உற்பவம் து திக்கப்படுவதாக
1 பர.அரு. பிதா
( 3 முறை சொல்லவும்)
உமது உற் பவத்தில் மாசில்லாதவராய் இருந்த கன்னி மரியா யே
உமது திருக்குமாரனின் பரம பிதாவிடம் எங்களுக்காக பரிந்து பேசியருளும்
செபிப்போமாக
சர்வேசுரா சுவாமி! தேவரீர் மாசில்லாத கன்னிகையின் திரு உற்பவத்திலே உம்முடைய திருச் சுதனுக்குத் தகுதியான வாசஸ்தலம் ஒன்றை ஆயத்தப் படுத்தி யருளினீரே! எங்கள் ஆண்டவருடைய திரு மரணத்தை முன்னிட்டு அவர் திருத்தாயாரைச் சகல பாவ அசுத்தங்களிலும் நின்று காத்த தேவரீரிடத்தில் வந்து சேர தயை பண்ணி யருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவரான இயேசுக் கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

சதா சகாயமாதாவுக்கு புகழ்மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர்திரு நாமம் உடைத்தான இடைவிடா சகாய மாதாவே,
எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே *
நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் ஆபத்தான வேளையில் நான் அதனை ஜெயம் கொள்ளும்படி . . .*
எங்களுடைய முழுமனதுடன் இயேசுவை நேசிப்பதற்கு . . .
நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக்கியத்துக்கு உள்ளாவேனாகில் அதினின்று தப்பி சீக்கிரம் எழுந்திருக்கும்படி. . .
பசாசின் ஊழியத்தில் ஈடுபடும் படியான சகாத தளையில் நான் சிக்கிக் கொள்வேனாகில் அத்தளையை தகர்த்தெறியும்படி . . .
தீவிர பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் சீக்கிரம் ஞான ஊணம் கொள்ளும்படி . . .
நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங்களைப் பெறுவதிலும் கிறிஸ்தவப் பக்திக்குரிய கடமைகளைப் பக்தியாய் செய்வதிலும் ..
வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது . . .
என் சீவியத்தில் வரும் துன்ப சோதனைகளிலும் . . .
என்னுடைய சுபாவ துர்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், நன்னெறியில்
கடைசி வரைக்கும் நிலை நிற்கும்படி நான் செய்யும்முயற்சிகளிலும் . . .
என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய்கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என்பலம் குறைந்து போகும்போது . . .
இவ்வுலகில் உள்ளதெல்லாம் என்னைக் கைவிட நான் கடைசி மூச்சை வாங்கி என் ஆத்துமம் என் சரீரத்தை விட்டுப் பிரியப் போராடும் போது . . .
உம்மை நான் எப்பொழுதும் நேசித்து பூஜித்து சேவித்துப் பிரார்த்திக்கும்படி . . .
ஓ! என் தேவதாயாரே என் கடைசிநாள்பரியந்தம் என் கடைசி மூச்சு பரியந்தம் . . .
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
====================================================
* எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே
செபிப்போமாக
சர்வ வல்லமையும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்குத் துணைபுரியும் வண்ணம்
ஆசீர்வதிக்கப்பட்டகன்னிமரியாவை உமது ஏகக் குமாரனுக்கு மாதாவாக்கத் திருவுளமானீரே!
இவருடைய வேண்டுதலால், அடியோர்கள் பாவ கொள்ளை நோயைத்தீர்த்து பரிசுத்தமான
இருதயத்தோடு உம்மை சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய
இயேசுக் கிறிஸ்து நாதர் வழியாக எங்களுக்குகட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். -ஆமென்.
பாவிகள் மனந்திரும்ப மன்றாட்டு
இறைவனின் அன்னையே! இடைவிடn சகாயமளிக்கும் என் தாயே, நான் ஒரு பாவி பெரும் பாவி.உம் திருமுன் பணிந்திருக்கிறேன். பாவிகளை மீட்க வந்த பரமனைப் பெற்றெடுத்த அன்னையே, எம்மைப் பாரும் | பாவியின் மரணத்தை அல்ல அவனுடைய மனந்திரும்புதலையே உம் திருமகன் விரும்புகிறார். உம் திருமகனின் விருப்பமே உமது திருவுளம் . அம்மா ,உம் திருமகனையும், உம்மையும் என் பாவங்களால் எவ்வளவோ நிந்தித்து இருக்கிறேன். உங்கள் அன்பினைப் புறக்கணித்து உங்கள் இதயங்களைப் புண்படுத்தி இருக்கிறேன். என் அவலநிலை உணர்ந்து உம்மிடம் அடைக்கலம் நாடி வந்திருக்கிறேன். பாவிகளின் அடைக்கலமே, அம்மா, என்னை உம் பிள்ளையாக, திருத்திய பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும். உம் திருமகனும் எங்கள் ஆண்டவரான இயேசுக்கிறிஸ்து என் குற்றங்களை மன்னித்தருள் மன்றாடும். எனக்காக மட்டுமல்ல, எங்கள் இடைவிடாச காயத் தாயே, என் போன்ற பாவிகள் எல்லோருக்காகவும் மன்றாடுகிறேன் அவர்களையும் உம் அன்பின் அரவணைப்பில் கொண்டு வந்து சேர்த்தருளும் ஆமென்
இல்லத்து அரசி சகாய அன்னை ஜெபம்

நிரந்தர சகாயத்தின் நேச அன்னையே, மாசு அணுகாத் தாயே , நாங்கள் உம்மை இவ்வில்லத்தின் தலைவியாகவும் அரசியாகவும் தெரிந்து கொள்கிறோம் . விஷப்பூச்சிகள் , தோற்று நோய், மின்னல் , இடி , நெருப்பு , புயல் காற்றில் இருந்தும் , விமானத் தாக்குதல் எதிரிகளின் பகையிலிருந்தும், திருடர் கையிலிருந்தும் இவ்வில்லத்தைக் காத்தருளும் . மிகவும் அன்புள்ள தாயே , இங்கிருப்போரை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் அவர்களுக்குத் துணையாய் இருந்து திடீர் சாவினின்று அவர்களைக் காத்தருளும் . எங்களை அனைத்து பாவக் கறையினின்றும் ஆபத்துகளினின்றும் காப்பாற்றும் . இவ்வுலகில் நாங்கள் இறைவனுக்கு உண்மையான ஊழியம் செய்து உம்மோடு கூட எப்பொழுதும் இறைவனின் இன்பமான திருக்காட்சியைச் சுவைக்க எங்களுக்காக மன்றாடும் தாயே ஆமென்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment